தமிழக செய்திகள்

பா.ஜனதாவுடன் கூட்டணி என்று யார் சொன்னது? தம்பிதுரை கேள்வி

பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்று யார் சொன்னது? என தம்பிதுரை கேள்வி எழுப்பி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான தம்பிதுரை, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

மேகதாது அணை கட்ட அ.தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. கூட்டணி பற்றி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் விடுத்த அறிக்கையை பார்த்தேன். அதன் பின்னர்தான் அதுபற்றி எனக்கு தெரியும். கூட்டணிப்பற்றி அவர்களிடம் பேசித்தான் முடிவெடுக்க முடியும். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்று யார் சொன்னது?.

ஜெயலலிதா எந்த வழியை வகுத்தாரோ, அந்த வழியில் அ.தி.மு.க. சென்று கொண்டு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தேவைப்பட்டால் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்தான் கூட்டணி பற்றி தெரியவரும். தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் கூட்டணி பற்றி கேள்வி எழவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து