தமிழக செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார்? தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும்; மு.க. ஸ்டாலின்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினத்தந்தி

தேனி,

தேனி வட புதுபட்டியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் பேசிய மு.க. ஸ்டாலின், தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல் அமைச்சராக பதவியேற்ற பின்பு கோட்டைக்கு கூட செல்லாமல் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ருபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்ததாக கூறினார்.

தமிழத்தில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது உண்மையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஸ்டாலின் கூறினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?