சென்னை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு எம்எல்ஏக்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். நேற்று தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
டிடிவி தினகரனுக்கு நடிகர் விஷால், பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கும் டிடிவி தினகரன் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.