சென்னை,
காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
கோடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க தயார் இல்லை என்றால், மக்கள் மன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் தயார். சயான், மனோஜ் ஆகிய இருவரும் ஏன் ஜாமினில் வெளியே வந்தார்கள்?
ஜாமினில் வெளியே வந்தவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏன்? ஜெயக்குமார் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார். கோடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க ஏன் பயப்படுகிறார்கள்? ராஜேஷ்குமார் நாவலைவிட கோடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்துள்ளன என்றார்.