சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயபுரத்தில் பேசியதாவது:-
எனக்கு பொறுப்பும் பதவியும் கிடைத்தால் ஆசிர்வாதம் வாங்க காலில் விழுந்தேன். தேர்தலுக்கு பின் ஆளுநராக பழனிசாமி செல்வார் என கனிமொழி பேச்சு. யார் சொல்லி கொடுக்கிறார்கள் என தெரியும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அடிமையா? அமித்ஷா என பாகிஸ்தான் நாட்டுக்காரரா?
மக்களுடன் செல்வாக்கை இழந்துள்ளதால் திமுக பதறுகிறது. திமுக ஆட்சியில் இருக்கும்வரை கஞ்சாவை ஒழிக்க முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கஞ்சா ஒழிக்கப்படும். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது அரிசி விலை ஏறவில்லை. திமுக ஆட்சியில் கிலோ ரூ.30 விலை ஏறியது.
கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின், உதயநிதி கவுன்சிலராக கூட முடியாது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொன்னார்கள், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னதை செய்தார்களா?
எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் மழைநீர் தேங்காது என்றனர். ஆனால் மழைநீர் தேங்கியது. சென்னை மாநகராட்சி மேயரை பொம்மையாக அமர வைத்து கொள்ளை அடிக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தரமான விலையில்லா அரிசி, பருப்பு, பாமாயில் வழங்கப்படும். கல்லூரி காலத்தில் இருந்து அதிமுகவிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். யாராலும் அதிமுகவை விலைக்கு வாங்க முடியாது. அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல்.
இவ்வாறு அவர் கூறினார்.