சென்னை,
சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது ஏன் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவியை கலைத்தது ஏன்? என்றும், இது தொடர்பாக அடுத்த வாரம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.