தமிழக செய்திகள்

ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து என்ற தி.மு.க., கவர்னரிடம் சென்று முறையிடுவது ஏன்? ஜெயக்குமார் கேள்வி

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசுகிறார்.

தினத்தந்தி

அ.தி.மு.க.வின் தேர்தல் தோல்விகள் குறித்தான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தி.மு.க.வின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் மக்கள் ஏமாந்த காரணத்தால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டதால்தான் அவர்களால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற முடிந்ததாகவும் குற்றம் சுமத்தினார்.

சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், கட்சிக்குள் அவருக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் கூறப்படும் செய்திகள் குறித்து பேசும்போது, சகுனியாக மாறி கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த சசிகலா நினைத்தால் அவர் தோற்று போவார் என்றும், பதவி ஆசை பிடித்த ஒரு சில தலைவர்கள் அவர் பக்கம் போகலாம், அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, நீட் தேர்வு மற்றும் எழுவர் விடுதலையில் எங்களை விமர்சித்த தி.மு.க.வினர், தற்போது இந்த பிரச்சினையில் கவர்னரிடம் போய் முறையிடுவது ஏன்? என விமர்சித்த அவர், ஆட்சியில் இருந்தால் ஒன்று பேசுவது, இல்லை என்றால் வேறு மாதிரி பேசுவது தி.மு.க.வுக்கு கை வந்த கலை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் எடப்பாடி, பன்னீர்செல்வம் இடையில் தொடரும் மோதல், பா.ஜ.க. மாநில தலைவர் சொல்வது போல் அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் ஒன்றா? உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் சமகால அரசியல் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளதை கேட்கலாம்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்