தமிழக செய்திகள்

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வயது குறைவானவராக இருந்தாலும் யோகி, சன்னியாசி காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம். நட்பு ரீதியாக மட்டுமே உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு எனது நன்றி. வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு நன்றி" என்று கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அரசியல் வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை