தமிழக செய்திகள்

பொங்கலுக்கு ரூ.1,000 வழங்காதது ஏன்? - சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க முடியவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் ரூ.1,000 பணம் கொடுக்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து வந்தனர்.

இந்த சூழலில், இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்காததற்கான காரணம் குறித்து சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது;

"பொங்கல் பரிசு தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயல், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே கிடைத்தது. பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் தரவில்லை. இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்த காரணங்களால்தான் பொங்கல் பரிசு  தொகுப்பில் ரூ.1,000 வழங்க முடியவில்லை."

இவ்வாறு அவர் கூறினார்.  

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...