தமிழக செய்திகள்

மேயர் பதவிக்கு மறைமுகத்தேர்தல் ஏன்? தமிழக அரசு விளக்கம்

மேயர் பதவிக்கு மறைமுகத்தேர்தல் நடத்துவது ஏன்? என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மக்கள் நேரடியாக வாக்களித்து மேயரை தேர்ந்தெடுக்கும் முறை ரத்து செய்யப்பட்டு, கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக அவசரச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் குறித்த அறிவிப்புக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேயர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் கவுன்சிலர்கள் மற்ற கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கும் சூழல் ஏற்படும் போது நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. வேறு, வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால் சில சமயங்களில் மாநகர, நகர மன்றக் கூட்டங்களை கூட்டுவதே சிக்கலாகி விடுகிறது.

மறைமுக தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும். அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு கூடும். மறைமுக தேர்தலால் உள்ளாட்சி அமைப்புகள் சுமுகமாக செயல்படும். அதிகமான கவுன்சிலர்களை கொண்ட சென்னை, மதுரை போன்ற இடங்களில் சிறப்பாக பணியாற்ற இம்முறை வழிவகுக்கும். மறைமுக தேர்தலே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்கும் என்ற பரிந்துரைகள், மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு