தமிழக செய்திகள்

திருப்பதி கோவில் போல் தமிழக கோவில்களில் தங்கும் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? உயர்நீதிமன்ற மதுரை கிளை

திருப்பதி கோவில் போல் தமிழக கோவில்களில் தங்கும் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

தினத்தந்தி

மதுரை,

ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் உள்ள தங்கும் விடுதிகள் பக்தர்களின் வசதிக்கேற்ப பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதன்மீது இன்று நடந்த விசாரணையில், திருப்பதி கோவிலில் உள்ள தங்கும் விடுதிகளில் இருக்கும் வசதிகள் தமிழகத்தில் உள்ள பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களில் ஏன் இல்லை என்று இந்து அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

திருப்பதி கோவில் தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல் தமிழகத்தில் உள்ள கோவில்களை ஏன் பராமரிப்பதில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்