சென்னை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் பேருந்து சங்க நிர்வாகி மகாலிங்கம் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது.
இதில், தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்காத சுங்க சாவடிகளின் உரிமத்தினை ஏன் ரத்து செய்ய கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தொடர்ந்து, எதனையும் கண்டு கொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலை தூங்குகிறது என கூறிய நீதிபதிகள், குண்டர்களை வைத்து சுங்க சாவடி நிறுவனங்கள் வசூல் வேட்டை நடத்துகின்றன என்றும் சாடினர்.