கோப்புப் படம் 
தமிழக செய்திகள்

"செயல்படாத அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடிக்கக்கூடாது?" - அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

செயல்படாத அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அறநிலையத்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம், பங்களா, நூற்பாலை ஆகியவை கட்டியுள்ளதாகவும் அவற்றை மீட்குமாறும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் விசாரணையில் நிலத்தைக் கணக்கிடவும் ஆக்கிரமிப்பை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறிய இந்து சமய அறநிலையத்துறை, ஈரோட்டில் உள்ள கீழமை கோர்ட்டின் உத்தரவு தடையாக இருப்பதாக கூறியது.

இதன்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பெரிய கட்டுமானம் செய்தது 3-வது நபர் கோர்ட்டிற்கு கொண்டு வந்த பிறகு தான் அறநிலையத்துறைக்கே தெரிய வருவது வேதனையளிக்கிறது என்று கூறினர்.

செயல்படாத அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அனுமதித்தவர்கள் தடுக்காதவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை