கோப்புப் படம் 
தமிழக செய்திகள்

சில இடங்களில் திடீர் மின்தடை ஏன்? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சில மாவட்டங்களில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்றிரவு சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைபட்டதால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், 'நேற்று இரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

இதை சமாளிக்க நமது மின்வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்துள்ளோம். தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது' என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை