தமிழக செய்திகள்

சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை

சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அண்ணா சாலை, அண்ணா நகர், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.

ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை காரணமாக நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் திருவண்ணாமலை, கரூர் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்