தமிழக செய்திகள்

தமிழகத்தில் பரவலாக மழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

* நெல்லையில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது இந்த தகவலை கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

* கனமழை எச்சரிக்கையால் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (சனிக் கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதேபோல புதுச்சேரியில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் இன்றும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்