தமிழக செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிர் காற்றுடன் மிதமான மழை பெய்வதால், இன்று (சனிக்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.

தினத்தந்தி

பரவலாக மழை

மாண்டஸ் புயல் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து காலை 7.15 மணிக்கு கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தார்.

இதனால் கிராமப்புறங்களில் காலை 6 மணிக்கே நகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மீண்டும் வீட்டிற்கு சிரமத்துடன் திரும்பினர்.

சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நேற்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு சரிபாதியாக குறைந்திருந்தது.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது.

நேற்று மாவட்டம் முழுவதும் காலை முதலே குளிர் காற்றுடன் மிதமான மழை பொழிவு காணப்பட்டதால், பொது மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்