சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, நாகை, புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, சேவூர், குண்னத்தூர், ஒண்ணுபுரம், களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், சேத்தன்குடி, கொத்தமங்கலம், குலமங்கலம், வடகாடு உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
திருவாரூர், மன்னார்குடி, விளமல், தேவகண்டநல்லூர், அடியக்கமங்கலம், குளிக்கரை, அம்மையப்பன் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்கிறது.
நாகை மாவட்டத்தில் சிக்கல், வேளாங்கண்ணி, நாகூர், திருப்பூண்டி,திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.