தமிழக செய்திகள்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 8-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 8-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

கணவன்-மனைவி தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 38), இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாரதி (36). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பாரதி மனஉளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

8-வது மாடியில் இருந்து குதித்தார்

இதனால் மனமுடைந்த பாரதி வீட்டில் யாரும் கவனிக்காத நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அடிக்குமாடி குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் தற்கொலை செய்து கொண்ட பாரதி உடலை பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்