தமிழக செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ‘கட்டைக் கொம்பன்’ காட்டு யானை - நீலகிரியில் பரபரப்பு

வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்து யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.

தினத்தந்தி

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து விடுகின்றன. அந்த வகையில் கூடலூரை அடுத்த குறிஞ்சி நகர் பகுதியில், குடியிருப்பு பகுதிக்குள் கட்டைக் கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். ஊரில் இருந்த வாலிபர்கள் யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதற்கிடையில், வனத்துறையினர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, பட்டாசு வெடித்து யானையை காட்டுப் பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் விரட்டினர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்