தமிழக செய்திகள்

காட்டுயானைகள் அட்டகாசம்

காட்டுயானைகள் அட்டகாசம்

தினத்தந்தி

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குள் நேற்று இரவு 8.30 மணிக்கு காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தது. இதில் 2 காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் இருந்த 8 வீடுகளின் கதவு, ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்தன. இதை கண்ட தொழிலாளர்கள், வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்