தமிழக செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள்

பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை செம்பக்கொல்லி, தட்டாம்பாறை, கருத்தாடு, கோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அய்யன்கொல்லி அருகே சாமியார் மலையில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டது. நேற்று முன்தினம் இரவில் கோட்டப்பாடியில் 5 காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து முற்றுகையிட்டது.

அங்கு தோட்டங்களில் பயிரிட்டு இருந்த வாழை, தென்னை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலையை யானைகள் வழிமறித்தது. இதனால் பயணிகள், வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி, பிதிர்காடு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்