தமிழக செய்திகள்

"விரைவில் நீட் விலக்கு பெறப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

விரைவில் நீட் விலக்கு பெறப்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை கொட்டிவாக்கத்தில் கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கேரம் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், நீட் விலக்கு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் வந்ததாகவும், அதற்கான பதிலை சட்ட வல்லுனர்களிடம் கேட்டுப் பெற்று முதல்-அமைச்சரின் கையொப்பத்துடன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டிற்கு நீர் தேர்வில் இருந்து விரைவில் விலக்கு பெறப்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்