தமிழக செய்திகள்

செங்கத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா? - அமைச்சர் கே.என்.நேரு பதில்

செங்கம் நகராட்சிக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்க மத்திய அரசின் நிதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தினத்தந்தி

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி, செங்கம் நகராட்சிக்கு கூட்டிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை இணைத்து புதிதாக கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கத்திற்கு மத்திய அரசின் நிதி கோரப்பட்டுள்ளது.

புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கத்தின்போது செங்கம் நகராட்சியும் இந்த திட்டத்தில் பலனடையும். திருவண்ணாமலை நகரத்திற்கு குடிநீர் வழங்கும் குழாய்கள் பழுதடைந்துள்ளன. அந்த குடிநீர் குழாய்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது' என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு