தமிழக செய்திகள்

தனது நண்பரை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? - ப.சிதம்பரம் கேள்வி

தனது அன்பு நண்பரை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தனது அன்பு நண்பரை கவுரவிக்க இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், திரு டொனால்டு டிரம்ப் இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைத்து, மூன்று நாடுகளும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். மூன்று நாடுகளும் அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திரு.மோடி தனது அன்பு நண்பரை கவுரவிப்பதற்காக மற்றொரு நமஸ்தே டிரம்ப்! பேரணியை நடத்துவாரா? என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் இந்தியா குறித்த உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்