தமிழக செய்திகள்

அதிமுக கூட்டணியில் தொடரலாமா? - புரட்சி பாரதம் இன்று முடிவு

அதிமுக கூட்டணியில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடருமா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இன்று தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 4 தொகுதிகள் கேட்டிருந்த நிலையில், தற்போது ஒரு தொகுதி (கே.வி. குப்பம்) மட்டுமே வழங்கப்பட்டிருப்பது கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளர் ருசேந்திர குமார், “ஒரே ஒரு தொகுதி வழங்கப்பட்டதில் திருப்தி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து, இன்று இறுதி முடிவை வெளியிட உள்ளார் அக்கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி.