தமிழக செய்திகள்

பாப்பாநாடு காவல் உதவி மையம் மீண்டும் செயல்படுமா?

போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிப்போன பாப்பாநாடு காவல் உதவி மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிப்போன பாப்பாநாடு காவல் உதவி மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போஸ்டர் ஒட்டும் இடமாக

பாப்பாநாடு கடைத்தெரு பகுதியில் தஞ்சை - பட்டுக்கோட்டை பிரதான சாலையோரத்தில் காவல் உதவி மையம் செயல்பட்டு வந்தது. போக்குவரத்தை சீர்படுத்துதல், அரசியல் கட்சிகளின் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை போலீசார் இந்த காவல் உதவி மையத்தில் இருந்து செய்து வந்தனர். இந்த காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் மாலை வேளைகளில் போக்குவரத்துகளை சீர் செய்வது வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த காவல் உதவி மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த காவல் உதவி மைய அறை தற்போது போஸ்டர்கள் ஒட்டப்படும் இடமாக மாறிவிட்டது.

செயல்பாட்டுக்கு வருமா?

எனவே பாப்பாநாடு பிரதான சாலையில் மூடப்பட்டு கிடக்கும் காவல் உதவி மையத்தை மீண்டும் திறந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்