தமிழக செய்திகள்

வி.கே.என்.கண்டிகையில் புனரமைக்கப்பட்ட நூலகம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வி.கே.என்.கண்டிகையில் புனரமைக்கப்பட்ட நூலகம் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

நூலகம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.கே.என்.கண்டிகை ஊராட்சியில் கடந்த 2009-ம் ஆண்டு அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பொது நூலகம் கட்டப்பட்டது.இந்த நூலகத்தில், அரசு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தினசரி நாளிதழ்களும் இருந்ததால், மக்கள் அதிக அளவில் வந்து படித்து வந்தனர். இந்த நிலையில் சில ஆண்டுகளாக நூலகம் சரிவர பராமரிக்கப்படாததால் பழுதடைய தொடங்கியது.

கோரிக்கை

இதையடுத்து கடந்த 2022-23ம் ஆண்டு ரூ.1.27 லட்சம் மதிப்பில் நூலகம் பழுது பார்த்தல் பணி நடைபெற்றது. இநத நிலையில் நூலகம் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நூலகத்தை திறந்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு