தமிழக செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? ஓபிஎஸ் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை, 

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளிடம் கலந்துபேசி முடிவெடுப்போம். திமுகவை பொறுத்தவரை சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஒரு பேச்சும், அதற்கு பின்பு ஒரு பேச்சுமாக இருப்பது அவர்களுக்கு வாடிக்கையானது.

டங்ஸ்டன் சுரங்கம் குறித்து முதலில் குரல் கொடுத்தவர்கள், அதிமுக உரிமை மீட்புக்குழு ஆகிய நாங்கள் தான்.மாணவியை பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் தெய்வம் நின்று கேட்கும் அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும்," என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை