தமிழக செய்திகள்

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுதி வசதி கிடைக்குமா?

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுதி வசதி கிடைக்குமா? என மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தினத்தந்தி

பெண்கள் மேல்நிலைப்பள்ளி

கரூ மாவட்டம், வெள்ளியணையில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 2001-ம் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பெண்களுக்கென செயல்படும் ஒரே அரசு பள்ளி இதுவாகும்.

எனவே வெள்ளியணை சுற்றுப்பகுதியை சோந்த மாணவிகளுடன், கரூ, தாந்தோன்றிமலை உள்ளிட்ட நகர பகுதியை சோந்த மாணவிகளும் அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சோந்த டி.கூடலூ, சோவைகாரன்பட்டி, பாளையம், ஆனைபட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சோந்த மாணவிகளும் பஸ் ஏறி வந்து இங்கு கல்வி பயில்கின்றனர். தற்போது சுமா 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தோவில் சிறப்பான தோச்சி வீதம் இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பெற்றோகள் பலரும் தங்களது பெண் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க ஆாவம் காட்டுகின்றனர்.

எதிர்பார்ப்பு

இவ்வாறு ஆாவம் காட்டும் பெற்றோகள் தங்களது குழந்தைகள் பஸ் ஏறி சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால் தயக்கம் காட்டுகின்றனர். எனவே பாதுகாப்பாக மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் வெள்ளியணையில் மாணவியர் விடுதியை அரசு ஏற்படுத்தி தந்தால் இந்த பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதி பெற்றோகளுக்கும் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சோக்க முன் வருவர்.

எனவே வெள்ளியணையில் அரசு மாணவியர் விடுதி அமைத்து தரப்படுமா? என மாணவிகள், சமூக ஆாவலர்கள், பெற்றோகள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது