தமிழக செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு

கூடுவாஞ்சேரி அருகே துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள மாநில கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழக போலீசாருக்கான மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு, மற்றும் கார்பைன் பிரிவு ஆகிய துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் முதலிடத்தை தமிழ்நாடு ஆயுதப்படை அணியும், 2-வது இடத்தை மத்திய மண்டல அணியும், 3-வது இடத்தை தலைமையிட அணியும் பெற்றது. இந்த அணிகளுக்கு சுழற்கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார். இதில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து