தமிழக செய்திகள்

தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு: துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து சில நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. இதனால் அதிமுகவில் புதிய சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!

தாய்வழி வந்த

தங்கங்கள் எல்லாம்

ஓர்வழி நின்று

நேர்வழி சென்றால்

நாளை நமதே!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...