தமிழக செய்திகள்

போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவர்களுடன் அரசு நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை

அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கடந்த 23-ந்தேதி வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

அரசு மருத்துவர்களுடன் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மருத்துவ சங்கத்துடன் அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் இழுபறி. நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?