சென்னை,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கேரி இடைநிலை ஆசிரியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி தலைமையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தெடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி ராபர்ட், மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து வருவதாலும், தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாலும், மாணவர்களின் நலன் கருதி பேராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.