தமிழக செய்திகள்

எந்தவித தாமத கட்டணமும் இன்றி ஜூன் 6-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

மின்சார கட்டணம் வருகிற ஜூன் 6-ந்தேதி வரை எந்தவித தாமத கட்டணமும் இன்றி செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர், அறிவுறுத்தலின்படி, மின்சாரத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து வருகிற ஜூன் 5-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்கள் தங்களது மின்சார இணைப்பிற்கான கட்டணத்தை வருகிற ஜூன் 6-ந்தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்