தமிழக செய்திகள்

குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும்- பொன். ராதாகிருஷ்ணன்

குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 71 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. பள்ளம் தோண்டும் ரிக் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

மீட்பு பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அங்கு மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

அனைத்து ஊழியர்களும் தனது வீட்டு துயரத்தைபோல் எண்ணி பணியாற்றி வருகின்றனர். நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது.

குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும். எந்தவித பேதமுமின்றி அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை