தமிழக செய்திகள்

ஊத்தங்கரை அருகேபெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு வலைவீச்சு

ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மனைவி வன ரோஜா (வயது 39). இவர்களுக்கு கருக்கம்பட்டி அருகே விளைநிலங்கள் உள்ளதால் பகல் நேரங்களில் அங்கே சென்று வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் வனரோஜா தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் குடிசைக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் வனரோஜாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் சத்தம் போடவே மர்ம நபர் குடிசையில் இருந்த கோடாரியால் பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வன ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்