தமிழக செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து மூதாட்டிகளை கடத்தி கொள்ளையடித்த பெண் கைது - கள்ளக்காதலன் ஓட்டம்

மூதாட்டிகளை ஏமாற்றி கடத்திச்சென்று மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

வேடசந்தூர்,

கரூர் மாவட்டம் தோகை மலை அருகே உள்ள தெலுங்குப்பட்டியைச் சேர்ந்த அரியதம்பி என்பவரின் மனைவி சுமதி(38). இவருக்கு தோகைமலையைச் சேர்ந்த கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த கள்ளக்காதல் ஜோடி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் 3 மூதாட்டிகளை ஏமாற்றி கடத்திச்சென்று மயக்க மருந்து கொடுத்து அவர்களிடம் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மூதாட்டிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கள்ளக்காதல் ஜோடி திருச்சி மாவட்டத்தில் பல மூதாட்டிகளை கடத்திச்சென்று நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிசார் சுமதியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கள்ளக்காதலன் கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்