தமிழக செய்திகள்

தோழியின் வீட்டில் நகை திருடிய பெண் கைது

திசையன்விளை அருகே தோழியின் வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திசையன்விளை:

திசையன்விளை அருகே ரம்மதபுரத்தைச் சேர்ந்தவர் ரிஷேர். இவருடைய மனைவி நிவேதா (வயது 25). கடந்த ஆண்டு இவருடைய தாயார் பஸ்சில் பயணித்தபோது, கடலூரைச் சேர்ந்த முபாரக் மனைவி பர்வீன் பானுவுடன் (30) பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு குடும்பத்தினரும் செல்போனில் பேசி பழகி வந்தனர். அப்போது பர்வீன் பானு அடிக்கடி ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வருவதாக கூறினார். இதையடுத்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வரும்போது, ரம்மதபுரத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு வருமாறு பர்வீன் பானுவை நிவேதா அழைத்தார். அதன்படி அவரும் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் பர்வீன் பானு ரம்மதபுரத்தில் உள்ள நிவேதா வீட்டுக்கு வந்து சென்றார். பின்னர் நிவேதாவின் வீட்டில் பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து நிவேதா, பர்வீன் பானுவிடம் கேட்டபோது, அவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். கடன் பிரச்சினை இருந்ததால் நகையை திருடிச் சென்றதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து நிவேதாவின் மாமனார் சிலுவைராஜன் அளித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்வீன் பானுவை கைது செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு