தமிழக செய்திகள்

பூச்சிக்கொல்லி மருந்து அடித்து நகை பறித்த பெண் கைது - போலீசார் விசாரணை

ரத்தினபுரி அருகே கடைக்குள் புகுந்து கடை உரிமையாளரின் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து நகை பறித்த பெண்ணை போலீசார் கைது உள்ளனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் தண்டு மாரியம்மன் கோவில் அருகே பரிசு பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி செல்வராணி (வயது 57) .கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த ஒரு பெண் செல்வராணி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து உள்ளார்.

அப்போது சத்தம் போட்ட செல்வராணியின் முகத்தில் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை அடித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை செல்வராணி விடாமல் பிடித்து கொண்டார்.

இறுதியில் செல்வராணியை தள்ளிவிட்டு விட்டு அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். வெளியே ஓடிய அந்த பெண்ணை சத்தம் போட்டு கொண்ட செல்வராணி துரத்தினார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் அவரை கையும் களவுமாக பிடித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்