தமிழக செய்திகள்

சரக்கு வாகனத்தை நிதி நிறுவனம் எடுத்துச் சென்றதால் பெண் தற்கொலை

செஞ்சி அருகே சரக்கு வாகனத்தை நிதி நிறுவனம் எடுத்துச் சென்றதால் பெண் தற்கொலை செய்து கொண்டா.

செஞ்சி;

செஞ்சி அருகே உள்ள சேர்விலாகம் மதுரா நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(வயது 55). இவரது மனைவி பொன்னி(50). இந்த தம்பதியின் மகன் நடராஜன், தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று சரக்கு வாகனத்தை வாங்கினார். இதில் ரூ.50 ஆயிரம் கடன் தொகை செலுத்தவில்லை. இதனால் தனியார் நிறுவனத்தினர், சரக்கு வாகனத்தை எடுத்துச்சென்று விட்டனர். ரூ.40 ஆயிரத்தை செலுத்திய பிறகும் சரக்கு வாகனத்தை திருப்பி தரவில்லை. இதனால் மனமுடைந்த பொன்னி நேற்று காலை வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.