தமிழக செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

மயிலாடுதுறையில் அண்ணன், தம்பி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மன வேதனை அடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறையில் அண்ணன், தம்பி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மன வேதனை அடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அண்ணன் தம்பி பிரச்சினை

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பல்லவராயன்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவருடைய மனைவி வேதவள்ளி (40). ரமேசுக்கும், அவரது அண்ணனுக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி ரமேஷும், அவரது சகோதரரும் சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று ரமேசுக்கும் அவரது சகோதரருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விஷம் குடித்தார்

இதில் மனமுடைந்த ரமேசின் மனைவி வேதவள்ளி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வேதவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி வேதவல்லி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன், தம்பி பிரச்சினையால் மனம் உடைந்த தம்பி மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு