தமிழக செய்திகள்

பெண் விஷம் குடித்து தற்கொலை

பெண் விஷம் குடித்து தற்கொலை

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கடன் வாங்கியதை கணவர் கண்டித்ததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகராறு

கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் காளியண்ணன்புதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி சாந்தாமணி(வயது 45), மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை சண்முகசுந்தரத்திடம் கூறவில்லை என தெரிகிறது. இதை அறிந்ததும் அவர், தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலை சண்முகசுந்தரம் வீட்டை விட்டு வெளியே டீ குடிக்க சென்றார். வீட்டில் தனியாக இருந்த சாந்தாமணி திடீரென விஷம் குடித்துவிட்டார். இதை செல்போன் மூலம் சண்முகசுந்தரத்திடம் தெரிவித்தார்.

இதனால் பதறியடித்து வீட்டுக்கு ஓடி வந்த அவர், சாந்தாமணியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சாந்தாமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்