தமிழக செய்திகள்

கம்மாபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

கம்மாபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டா.

தினத்தந்தி

கம்மாபுரம், 

கம்மாபுரம் அருகே உள்ள சின்னகோட்டுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி மனைவி பூமணி(வயது 56). இவர், விவசாய பயிர்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூமணியின் மகன் அருள்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை