தமிழக செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

திருவாலாங்காடில் தீராத வயிற்று வலி காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்பாடி மேட்டு காலனி கிராமத்தை சேர்ந்தவர் இன்பநாதன் மனைவி ரமாதேவி (வயது 50). இவர் கடந்த 5 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வயிற்றுவலி அதிகமாகவே மனமுடைந்த ரமாதேவி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.

அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளுவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி ரமாதேவி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு