தமிழக செய்திகள்

தீக்குளித்து பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே பெண்தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவன காயமடைந்தார்.

தீக்குளிப்பு

அரக்கோணத்தை அடுத்த அம்மவார் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50), விவசாயி. இவரது மனைவி மனோரா (48). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனோரா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை மனோரா வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறி துடித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரங்கநாதன் மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது ரங்கனாதன் மீதும் தீப்பிடித்தது.

பெண் சாவு

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே படுத்திருந்த மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மனோரா வழியிலேயே இறந்துவிட்டார். ரங்கநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...