தமிழக செய்திகள்

சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்ற பெண் தீக்குளிப்பு

சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்ற பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

சாத்தூர், 

சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை வசூலிப்பதற்காக வத்திராயிருப்பு அருகே காடனேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வந்தார். அப்போது அவர் ராஜேஸ்வரியிடம் கடனை திரும்ப கட்டுமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து சீனிவாசன், ராஜேஸ்வரியை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி தனது வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ராஜேஸ்வரியை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ராஜேஸ்வரியின் மகன் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...