தமிழக செய்திகள்

தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழப்பு

தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று காலை ரேவதி தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலிக்கு வைக்கப்படும் பசையை (விஷம்) வைத்து பல் துலக்கியுள்ளார். பின்னர் வேலைக்கு சென்ற ரேவதி, மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுத்துள்ளார்.

இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை