தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

ராணிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 23). இவர் ராணிப்பேட்டை-கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்றுள்ளார்.

பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது லோகேஸ்வரி திடீரென மயக்கம் அடைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த லோகேஸ்வரி உடனடியாக வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே அவர் இறந்து விட்டார். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...