தமிழக செய்திகள்

மகன் கண் எதிரே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு

மகன் கண் எதிரே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு

பவானிசாகர்

பவானிசாகர் மெக்கானிக் குடியிருப்பை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி வர்ஷலா (வயது 58). இவருடைய மகன் வினோத். வர்ஷலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டர்சைக்கிளில் வினோத் நேற்று அழைத்து சென்றார். பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையம் அருகே சென்றபோது வர்ஷலா எதிர்பாராதவிதமாக திடீரென மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினோத் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வர்ஷலா இறந்தவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு